உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் குறைவடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக மசகு எண்ணெய் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது. புதிய விலைப்பட்டியலுக்கமைய பிரென்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பெரல் 93.97 டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மசகு எண்ணெய் ஒரு பெரல் 88.44 டொலராக குறைவடைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 140 டொலருக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட மசகு எண்ணெய் 88 டொலர் வரை குறைவடைந்துள்ளமை பாரிய விலைவீழ்ச்சியென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.