சுமார் 140 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு
Related Articles
சுமார் 140 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது மணல்தட்டு பகுதியில் வடக்கு கடற்படை அதிகாரிகளால் குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 47 கிலோ மற்றும் 240 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் சூட்சுமமான முறையில் 19 பொதிகளில் மறைத்து எடுத்துவரப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.