எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள்
Related Articles
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்தார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு திகதியொன்றை பெற்றுத்தருமாறும் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் விசாரணைகளை செப்டெம்பர் மாதம் 21ம் திகதி முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்போது சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான குறித்த கப்பலின் பிரதானி மாலுமியும், கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.