9வது பாராளுமன்றத்தின் 3வது அமர்வு இன்று..
Related Articles
9வது பாராளுமன்றத்தின் 3வது அமர்வு இன்று 10.30க்கு வைபவ ரீதியாக ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தரும் நிகழ்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சம்பிரதாய பூர்வமாக இடம்பெறும் மரியாதை வேட்டுக்கள் மற்றும் வாகன பேரணி என்பன இடம்பெறாது. மரியாதை வேட்டுக்கள், இராணுவ மரியாதை உள்ளிட்டவை இடம்பெறக்கூடாதென ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.