இங்கிலாந்து பேர்மிங்ஹாமில் இடம்பெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகளின் பதக்கப்பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் காணப்படுகிறது. அவுஸ்திரேலியா 31 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கல பதக்கங்களை பெற்று 71 பதக்கங்களுடன் முன்னிலையில் காணப்படுகிறது. இங்கிலாந்து 21 தங்கம், 22 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்களுடன் 54 பதக்கங்களை பெற்று 2ம் இடத்திலும் நியூசிலாந்து அணி 13 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களுடன் 24 பதங்களை பெற்று 3ம் இடத்திலும் காணப்படுகிறது. இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கல 9 பதக்கங்களுடன் 6ம் இடத்தில் காணப்படுகிறது.
இந்நிலையில் 22வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஐந்தாவது தினம் இன்றாகும். இன்று இலங்கை தடகள வீர வீராங்கணைகள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். தெற்காசியாவின் வேகமான மனிதரான யுபுன் அபேகோன் இன்று முதற்கட்ட போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை எதிர்பார்த்த வெற்றியை அடையமுடியாது போனதாக அங்கிருக்கும் எமது பிரதிநிதி ச்சத்துக திவாசன தெரிவித்தார்.