ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது..
Related Articles
ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் இல்லம் ஜூலை 13ஆம் திகதி அத்துமீறி நுழைந்து தீ வைத்து அழிக்கப்பட்டது. பல மதிப்புமிக்க புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.