சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளிடமிருந்து குற்றச்சாட்டு..
Related Articles
சகல பாரளுமன்ற உறுப்பினர்களும் சர்வக்கட்சி அரசாங்கத்திற்காக ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். அது தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், மகா சங்கத்தினரும் கருத்து வெளியிட்டுள்ளனர். பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக தேசிய சர்வக்கட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு ஜனாதிபதி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை மறுதினம் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதன் பின்னர் சர்வக்கட்சி அரசாங்கத்திற்காக அழைப்பு விடுப்பதற்கு ஜனாதிபதி தயாராகவுள்ளதாகவும் பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்நிலையில் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கும் இதேவேளை மொட்டுக்கட்சியும் யானைக்கட்சியும் இணைந்து எதிரவரும் ஒரு சில தினங்களுக்கு ஆட்சியை முன்னெடுத்துச்செல்வதற்கா சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். பழைய முறையை புதிய தலைவரின் ஊடாக கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அதன் காரணமாக போராட்டத்தை கட்டுப்படுத்தக்கூடிய சூழல் இல்லை. மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய வேலைத்திட்டம் அவசியமென அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார். வேலைத்திட்டம் இல்லாத விக்ரமசிங்கவிற்கும், ராஜபக்ஷக்களுக்கும் நாட்டை ஆட்சி செய்வதற்கான மக்கள் ஆணை இல்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதற்கு முடியுமான சூழல் அதில் உள்ளடங்கியுள்ளவர்களின் பெயர் விபரங்களை தெரிந்துக்கொண்டதன் பின்னரே தெரிந்துக்கொள்ள முடியுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.