கடந்த மாதத்தில் அண்ணளவாக 30 கொரோனா மரணங்கள் பதிவு..
Related Articles
கடந்த மாதத்தில் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களில் அதிகளவானோர் 60 வயதை கடந்தவர்களென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு மில்லியன் பேர் உள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 தொடர்பான பிரதான இணைப்பு தொழிநுட்ப சேவை பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் அண்ணளவாக 30 கொரோனா மரணங்கள் வரை பதிவாகியுள்ளன. இவ்வாறான சூழலில் புதிய ஒமிக்ரோன் பிறழ்வு திரிபு நாட்டில் இணங்காணப்பட்டுள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற கொவிட் மரணங்களுடன் ஒப்பிடுகையில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் ஊடாக கொவிட் மரணங்களை தவிர்க்க முடியுமெனவும் உரிய சுகாதார வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுவதன் ஊடாக நோய் பரவகை கட்டுப்படுத்த முடியுமெனவும் வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளார்.