ஐரோப்பிய வலயத்தின் வெப்பநிலையானது வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு
Related Articles
ஐரோப்பிய வலயத்தின் வெப்பநிலையானது வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய வலயத்தின் பிரான்ஸ், ஸ்பெயின், க்ரீஸ், போர்த்துக்கள் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளது. வடக்கு ஸ்பெயினின் வெப்பநிலையானது 43 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளது. பிரான்ஸின் சில பகுதிகளில் 42 பாகை செல்சியஸான வெப்பநிலை அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெப்பநிலை அதிகரித்ததையடுத்து காட்டுத்தீ சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதனால் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு முழுமையாக அழிவடைந்துள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.