எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கான பதிவுகளை விரைவில் மேற்கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை
Related Articles
எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கான பதிவுகளை விரைவில் மேற்கொள்ளுமாறு கனியவள கூட்டுத்தாபனம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கென வரிசைகளில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்வதற்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறித்த புதிய வேலைத்திட்த்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். வரிசைகளிலிருந்து விலகும்வரை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் அனுமதிப்பத்திரம் மற்றும் வாகன இலக்கத்தின் இறுதி இலக்கத்திற்கமைய எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தினத்தை ஒதுக்கப்படும். குறித்த வேலைத்திட்டத்திற்கமைய மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் தொடர்ந்தும் நீண்ட வரிசை காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டது.