பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சுதந்திரமாக தமது மனசாட்சிக்கு உட்பட்டு செயற்படவும், ஒன்றுகூடவும் சிறந்த சூழலை உருவாக்கித்தருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார். இவ்வாறு அமைதியான சூழலில் பொறுப்புக்கூற வேண்டிய சகலரின் ஒத்துழைப்புடன் 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்யும் பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். இதற்கமைய நாளை சனிக்கிழமை பாராளுமன்றம் கூடும். சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அதில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்தார்.
நாளை பாராளுமன்றம் கூடவுள்ளது..
படிக்க 0 நிமிடங்கள்