fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெத்தும் நிஷங்கவிற்கு கொவிட் தொற்று… ஓசத பெர்னாண்டோ அணியில்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2022 12:27

பெத்தும் நிஷங்கவிற்கு கொவிட் தொற்று… ஓசத பெர்னாண்டோ அணியில்..

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் இன்றாகும். தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மதியபோசன இடைவேளை வரை 8 விக்கட்டுக்களை இழந்து 499 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தினேஸ் ச்சந்திமால் டெஸ்ட் அரங்கில் 13வது சதத்தை நேற்றைய தினம் பூர்த்தி செய்தார். இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பதற்கு தினேஸ் ச்சந்திமாலின் சதம் பெறும் உதவியாக அமைந்தது. அவர் 153 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுள்ளார். திமுத் கருனாரத்ன 86 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 85 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்திவ்ஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததோடு. கமிந்து மென்டிஸ் கண்ணி டெஸ்ட் போட்டியிலேயே அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் மிச்சல் ஸ்ட்ரக் 3 விக்கட்டுக்களையும், நெத்தன் லயன், மிச்சில் ஸ்வெப்சென் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றினர். ஏற்கனவே அவுஸ்திரேலியா அணி தமது முதல் இனிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 145ஓட்டங்களையும், மானஸ் லபுச்சேன்ஜ் 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்;. இலங்கை அணியின் அறிமுக வீரர் பிரபாத் ஜயசூரிய ஆறு விக்கட்டுக்களை வீழ்த்தியதோடு, கசுன் ராஜித்த இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றினர். இலங்கை அணி அவுஸ்திரேலியா அணியை விட 135 ஓட்டங்களினால் முன்னிலையிலுள்ளது.

இதேவேளை இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்கவிற்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஓசத பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2022 12:27

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க