fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இலங்கை வருகை..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2022 12:37

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி இலங்கை வருகைத்தந்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தனர். பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளனர். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் சிரேஷ்ட வீரர்கள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 16ம் திகதி காலிசர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 24ம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இருவர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனஞ்சய டி சில்வா மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் கொவிட் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2022 12:37

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க