சீனாவின் ஷங்ஹாய் பொலிஸ் தரவு கட்டமைப்பிலிருந்து ஹெக்கர்களினால் தரவுகள் களவாடப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த தரவுகளை மீள பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு பில்லியன் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன வரலாற்றில் பெறப்பட்டுள்ள மிகப்பெரும் தரவு களவாடல் சம்பவமாக குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஒரு பில்லியன் மக்கள் தொடர்பான தகவல்கள், வழக்கு தொடர்பான விடயங்களை விற்பனை செய்வதற்கு முற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான தகவல்கள் கசிந்த நிலையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஷங்ஹாயின் தேசிய பொலிஸ் தரவு தளத்திலிருந்தே அவை பெறப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் தனி நபர்களின் ஒட்டுமொத்த தரவுகளும் ஹெக்கர்களினால் பெறப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்ஹாய் தரவு கசிவு குறித்து சீனாவின் முன்னணி சமூக ஊடகமான வெய்போ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.