எரிபொருள் நெருக்கடி காரணமாக ஊழியர்கள் சேவைக்கு வருகைத்தர முடியாமையால் இன்றைய தினம் 48 அலுவலக புகையிரதங்களில், 25 புகையிரதங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. எரிபொருள் இன்மையால் கடமைக்கு சமூகமளிக்க முடியாதென புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பிக்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
புகையிரத கட்டுப்பாட்டாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே அது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் புகையிரத சாரதிகளும், ஒழுங்குப்படுத்தல் அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமையால் புகையிரத பயணங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் கோரியே அவர்கள் தமது பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
கரையோர ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டதையடுத்து பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். 5 ரயில் சேவைகளே இடம்பெறும் நிலையில், பெரும் எண்ணிக்கையிலானோர் அவற்றில் பயணிப்பதை காணக்கூடியதாக இருந்தது.