அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கருத்து வெளியிடுகையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ ஊடாக தனியார் பஸ்களுக்கு சரியான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படா விட்டால் நாளை முதல் தனியார் பஸ் போக்குவரத்து முடங்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
“போக்குவரத்து அமைச்சரும் எரிபொருள் அமைச்சரும் டிப்போ ஊடாக தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்குவதாக அறிவித்தனர். அப்படியொரு விடயம்இதுவரை இங்கு இடம்பெறவில்லை. இன்று இலங்கை முழுவதும் 18 ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடவிருந்த போதும் 500 பஸ்களே சேவையில் ஈடுபடுகின்றன. டீசல் விநியோகிக்கப்படா விட்டால் இன்று சேவையிலுள்ள 500 பஸ்களும் நாளைய தினம் சேவையிலிருந்து விலகும்.”