fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையணி தோல்வியின் விளிம்பில்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2022 10:13

இலங்கையணி தோல்வியின் விளிம்பில்..

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. போட்டியில் இலங்கையணி தோல்வியின் விளிம்பில் உள்ளது. 2 ஆவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி சகல விக்கட்டுகளையும் இழந்து, 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவுஸ்திரேலிய அணிக்கு 2 ஆவது இனிங்சின் வெற்றியிலக்காக 5 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இலங்கையணி 2 ஆவது இனிங்சில் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறியது. அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் நதன் லயன் மற்றும் ட்ரெவிஸ் ஹிட் ஆகியோர் தலா 4 விக்கட்டுகளை கைப்பற்றினர். இதேவேளை இலங்கையணி தனது முதல் இனிங்சில் 212 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்சிற்காக 321 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கையணியின் துடுப்பாட்ட வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் கொவிட் தொற்று காரணமாக இரண்டாவது இனிங்சில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக ஓஷத பெர்ணாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2022 10:13

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க