நோர்வூட் பகுதியில் தங்க நகைகளை திருடிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நகை அடகு பிடிக்கும் நிறுவனமொன்றிலிருந்து ஒன்றரை கிலோ கிரேம் தங்கம் திருடப்பட்டுள்ளது. குறித்த தங்கம் சந்தேகநபரொருவரின் வீட்டுத்தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிசார் பலரது கைவிரல் அடையாளங்களை பதிவுசெய்துள்ளனர். குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணொருவரும் மற்றுமொரு நபரும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.