இன்றைய தினம் 22 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் அலுவலக ரயில் சேவைகளும் அடங்குவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகளை இரத்து செய்ய நேரிட்டதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்வதில் காணப்படும் நெருக்கடி காரணமாக புகையிரத திணைக்கள ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் சேவைகளை நடத்துவதில் சிக்கல்கள் காணப்படுவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று 22 ரயில் சேவைகள் ரத்து..
படிக்க 0 நிமிடங்கள்