பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 32 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகளின் ஒத்துழைப்புடன் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. குடும்பமொன்றிற்கு 7 ஆயிரத்து 500 ரூபா வீதம் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும். இம்மாதம் முதல் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கி 200 மில்லியன் அமெரிக்க டொலரையும் , ஆசிய அபிவிருத்தி வங்க 200 மிலலியன் அமெரிக்க டொலரையும் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 32 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம்..
படிக்க 0 நிமிடங்கள்