இலங்கையில் மீண்டும் கொவிட் 19 பரவும் அபாயம்..

இலங்கையில் மீண்டும் கொவிட் 19 பரவும் அபாயம்..

🕔15:09, 19.ஜூலை 2022

இலங்கையில் மீண்டும் கொவிட் 19 பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர். மேலும், இலங்கையில் நாளாந்தம் அதிகரித்து வரும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இந்நிலைமை காணப்படுவதாக அந்தத் திணைக்களத்தின் பிரதான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்தார்.

Read Full Article
பாராளுமன்றம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..

பாராளுமன்றம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..

🕔13:40, 19.ஜூலை 2022

இன்றைய தினம் பாராளுமன்றம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இன்றைய தினமும், நாளைய தினமும் எவ்வித எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கப்போவதில்லையென தெரிவித்துள்ளபோதும், பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றமையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பாராளுமன்றத்தை சூழவுள்ள வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் அவசரகாலநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சகல பகுதிகளிலும்

Read Full Article
ரஷ்யா 300க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகன யுக்ரேன் குற்றச்சாட்டு

ரஷ்யா 300க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகன யுக்ரேன் குற்றச்சாட்டு

🕔12:24, 19.ஜூலை 2022

ரஷ்யா 300க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகன யுக்ரேன் குற்றம் சுமத்தியுள்ளது. குருஸ் ஏவுகணை, பெலஸ்டிக் ஏவகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக யுக்ரேன் குறிப்பிட்டுள்ளது. யுக்ரேன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. கப்பல் கட்டும் தளம் உட்பட தொழிற்தறை கட்டமைப்புக்கள், பொது உட்கட்டமைப்புக்களை இலக்கு வைத்து

Read Full Article
நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை

நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை

🕔12:22, 19.ஜூலை 2022

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 3 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பலிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
ஐரோப்பிய வலயத்தின் வெப்பநிலையானது வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு

ஐரோப்பிய வலயத்தின் வெப்பநிலையானது வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு

🕔12:22, 19.ஜூலை 2022

ஐரோப்பிய வலயத்தின் வெப்பநிலையானது வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய வலயத்தின் பிரான்ஸ், ஸ்பெயின், க்ரீஸ், போர்த்துக்கள் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளது. வடக்கு ஸ்பெயினின் வெப்பநிலையானது 43 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளது. பிரான்ஸின் சில பகுதிகளில் 42 பாகை செல்சியஸான வெப்பநிலை அதிகரித்துள்ளதாக

Read Full Article
எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கான பதிவுகளை விரைவில் மேற்கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை

எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கான பதிவுகளை விரைவில் மேற்கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை

🕔12:19, 19.ஜூலை 2022

எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கான பதிவுகளை விரைவில் மேற்கொள்ளுமாறு கனியவள கூட்டுத்தாபனம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கென வரிசைகளில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்வதற்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறித்த புதிய வேலைத்திட்த்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். வரிசைகளிலிருந்து விலகும்வரை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் அனுமதிப்பத்திரம் மற்றும் வாகன

Read Full Article
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் குறைப்பு

🕔12:16, 19.ஜூலை 2022

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதையடுத்து அதன் சலுகைகளை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் பஸ் கட்டணங்களை குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. புதிய பஸ் கட்டண திருத்தத்திற்கமைய ஆக குறைந்த 40 ரூபாவிலிருந்து 38 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
இன்று முதல் டிப்போக்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்.

இன்று முதல் டிப்போக்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்.

🕔12:14, 19.ஜூலை 2022

இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனியவள கூட்டுத்தாபனத்தின் மொத்த களஞ்சியசாலை தொகுதியிலிருந்து புகையிரதம் மற்றும் பவுசர்களினூடாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அத்தோடு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள பெற்றோல் கப்பலிலிருந்து பெறப்பட்ட பெற்றோல் மாதிரி பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், கப்பலிலிருந்து பெற்றோலை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read Full Article
ரணில், டளஸ், அனுரவுக்கிடையில் ஜனாதிபதி பதவிக்கான மும்முனை போட்டி..

ரணில், டளஸ், அனுரவுக்கிடையில் ஜனாதிபதி பதவிக்கான மும்முனை போட்டி..

🕔12:13, 19.ஜூலை 2022

பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகின. ஆரம்ப நடவடிக்கையாக ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்யுமாறு பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். அதனையடுத்து ஜனாதிபதி போட்டிக்கான வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்த நிலையில், அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அதனை வழிமொழிந்தார்.

Read Full Article
ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து தான் விலகுவதாக சஜித் அறிவிப்பு

ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து தான் விலகுவதாக சஜித் அறிவிப்பு

🕔10:28, 19.ஜூலை 2022

ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article