நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையையடுத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு மகப்பேற்றுக்காக முன்கூட்டியே செல்லுமாறும், பிரசவ வலி ஏற்படும் வரை காத்திருக்க வேண்டாமெனவும் மகப்பேற்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எரிபொருள் இன்மை காரணமாக வைத்தியசாலைகளுக்கு செல்வதில் தாமதம் ஏற்பக்கூடுமெனவும் நேற்றைய தினம் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு செல்ல முடியாமையினால் தனது வீட்டிலேயே குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வழங்கப்பட்டுள்ள திகதியை அண்மித்த காலப்பகுதியில் வலி ஏற்படுகின்ற அறிகுறி காணப்பட்டால் வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெருக்கடி நிலையையடுத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட அறிவிப்பு..
படிக்க 0 நிமிடங்கள்