fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5வது ஒருநாள் போட்டி இன்று..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2022 11:03

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளும் கொழும்பு ஆர் பி;ரேமதாச மைதானத்தில் மோதவுள்ளன. பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. இலங்கையணி 3-1க்கு என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இலங்கையணியின் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இன்றைய போட்டியை பார்வையிட ரசிகர்கள் மஞ்சள் நிற ஆடையணிந்து வருகைதரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் நெருக்கடி நிலைக்கு மத்தியில் அவுஸ்திரேலிய அணி கிரிக்கட் தொடரை இரத்து செய்யாது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கைக்கு வருமாறு சுற்றுலாப்பயணிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கிலேயே ரசிகர்கள் அவுஸ்திரேலிய அணியின் சீருடை நிறமான மஞ்சள் நிற ஆடையணிந்து இன்றைய போட்டியை பார்வையிட வருகைதரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2022 11:03

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க