வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு நுடநஉவசiஉ வாகனமொன்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்தை அடிப்படையாக வைத்து மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும். இதற்காக அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாட்டில் வாகன இறக்குமதி முழுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் வெளிநாட்டில் பணியும் இலங்கையர்களுக்காக மாத்திரம் மின்சார வாகன இறக்குமதிக்கான உரிமம் வழங்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் தொழில்வாய்ப்பு திட்டத்தின் கீழ் அங்கு பயணித்த 12 பேருக்கு விமான டிக்கட்டுக்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.