பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளுக்கமையவே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் கம்பஹா பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர் இன்று அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கடந்த மே மாதம் 9ம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறையின்போது நிட்டம்புவ பகுதியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும், அவரது பாதுகாப்பு அதிகாரியும் கொலை செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.