இந்தியாவின் தமிழ்நாட்டு மக்களின் உதவிப்பொருட்களுடன் மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் 14 ஆயிரத்து 712 தொன் அரிசி, 250 தொன் பால்மா, அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவை அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் ஆலொசனைக்கமைய மனிதநேய கப்பல் நேற்றைய தினம் இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. இதேவேளை தமிழக மக்களால் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மனிதநேய உதவிகள் அடங்கிய முதலாவது கப்பல் கடந்த மாதம் 22ம் திகதி இலங்கையை வந்தடைந்தது. அதில் 9 ஆயிரம் தொன் அரிசி, 50 தொன் பால்மா, அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் போன்றவை அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தமிழ்நாட்டு மக்களின் உதவிப்பொருட்களுடன் மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு..
படிக்க 0 நிமிடங்கள்