விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
தளபதி 66 படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று தளபதி 66 படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரையும் படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்திற்கு ‘வாரிசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.