கேரள கஞ்சா போதைப்பொருள் பொதியொன்றை எடுத்துச்சென்ற கடற்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரிவின் விஷ போதைப்பொருள் சுற்றிவளைப்பு பிரிவினரால் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் – குருநாகல் பிரதான வீதியின் கற்குளம் பிரதேசத்தில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களான குறித்த கடற்படை அதிகாரிகளிடம் காணப்பட்ட பொதியிலிருந்து 650 கிரேம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பொதி எவ்வாறு அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் புத்தளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கேரள கஞ்சா போதைப்பொருள் பொதியொன்றை எடுத்துச்சென்ற கடற்படை அதிகாரிகள் இருவர் கைது..
படிக்க 0 நிமிடங்கள்