ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக பெரேரா சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமான நிலையில், தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் மேற்கொண்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். ஏற்கனவே தம்மிக பெரேராவை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்படாது உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்றைய தினம் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தம்மிக்க பெரேரா இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்..
படிக்க 0 நிமிடங்கள்