நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் சைக்கிள்களினால் இடம்பெற்ற விபத்துக்களில் 96 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 202 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், எரிபொருள் நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே சைக்கிள் பாவனை அதிகரித்துள்ளதாகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், பொலிஸ் ஊடக பேச்சாளருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சைக்கிள்களை பெருந்தெருக்களில் பயன்படுத்துவோர் கூடுதல் அவதானத்துடன் செலுத்த வேண்டுமெனவும், விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளும் நடைமுறைகளை பின்பற்றுமாறும் பொலிஸ் திணைக்களத்தின் ஊடக பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் சைக்கிள்களினால் இடம்பெற்ற விபத்துக்களில் 96 பேர் உயிரிழப்பு..
படிக்க 0 நிமிடங்கள்