பருத்தித்துறை துன்னாலை பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், தாக்குதல் நடத்தியுள்ளனர். நள்ளிரவு வேளையில் வீட்டுக்குள் புகுந்தவர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், 12 பவுண் தங்க நகையை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கடந்த வாரம் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஐந்தரை பவுண் நகைகளை வைத்திருந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கான பயன்படுத்தப்பட்ட வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்..
படிக்க 0 நிமிடங்கள்