இரண்டரை கிலோ மலைக்குருவி கூடுகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுலபிடிய பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் பதுளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். எல்ல தெமோதர பகுதியிலுள்ள புகையிரத சுரங்கப்பகுதியிலிருந்து மலைக்குருவி கூடுகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் மலைக்குருவி கூடுகளை கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு 10 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் மலைக்குருவி கூடொன்று 4 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலைக்குருவி கூடுகளிலிருந்து வெளியாகும் மெலியம் எனப்படும் கழிவுகளைக் கொண்டு பாலியல் உற்சாகத்தை தூண்ட முடியுமென கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மலைக்குருவி கூடுகள் பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிசார் மேற்கொண்ட ஆரம்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.