அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்டித் தரும் தொழிலுக்கு புதிய யுக்திகள் வகுக்கப்பட வேண்டும்..
Related Articles
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரைவாக அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு தொழில்துறையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீண்ட கால விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் முதலீடுகளுக்கு கடுமையான தடையாக உள்ளது. முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் தொழில்துறையை மேம்படுத்துவதற்கும் புதிய உத்திகளைப் பின்பற்றப்போவதாக ஜனாதிபதி கூறுகிறார்.
கைத்தொழில் அமைச்சின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்காக இன்று (16) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.