fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தீ விபத்தில் வர்த்தக நிலையமொன்று முற்றாக எரிந்து நாசம்..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2022 10:32

தலவாக்கலை நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் வர்த்தக நிலையமொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பழங்கல் மற்றும் மரக்கறி விற்பனை செய்யப்பட்ட வர்த்தக நிலையமே தீயில் எரிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தீ விபத்து நேற்றிரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தலவாக்கலை பொலிஸாரும், பொதுமக்களும் இணைந்து தீ ஏனைய இடங்களுக்கு பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ ஏற்பட்டபோது வர்த்தக நிலையத்தில் எவரும் இருக்கவில்லையென பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதனால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. தீயினால் மரக்கறி மற்றும் பழங்கல் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. எனினும் சேத விபரங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2022 10:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க