பொருளாதார நெருக்கடியை வெற்றிக்கொள்வதற்கான ஆலோசனைகள் அடங்கிய திட்ட வரைபு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை பெற்றதன் பின்னர் திட்ட வரைபை நிறைவுசெய்து, அவற்றை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி, அதை வெற்றிக்கொள்வதற்கான குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் குழுவுக்கு விளக்கமளித்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்கான ஆலோசனைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரட்ன, குமார வெல்கம, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதூர்தீன், அலி சப்ரி, அனுர பிரியதர்ஷன யாப்பா, பேராசிரியர் ச்சரித்த ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்