40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை எடுத்துவரும் கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
ஹொரணை நகரில் எரிபொருள் வரிசை மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கு காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களில் உதிரிப்பாகங்களை திருடும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது. பொதுமக்கள் எரிபொருளை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க கலகம் அடக்கும் பொலிஸார் முற்பட்டபோது, அமைதியின்மை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.