நுவரெலியா நகரில் ஈஸிகேஸ் முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரும் அவரது உதவியாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மஹரகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை மேற்கொள்ளும் பெண் ஒருவரின் உதவியாளரென தெரியவந்துள்ளது.
அவர் மஹரகமையிலிருந்து நுவரெலியாவிற்கு போதைப்பொருளை எடுத்துவந்து ஈஸிகேஸ் முறையில் விற்பனை செய்கின்றமை தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் போதைப்பொருள் அடங்கிய 25 பக்கற்றுக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. விற்பனைக்கென பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் கையடக்க தொலைபேசிகளும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.