தங்காலை மொரக்கெட்டியார பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சிறைச்சாலையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெப்ரக வாகனம் ஒன்றை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்வர்கள் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். கெப்ரக வாகனத்தை செலுத்திய குடாவெல்ல பகுதியை சேர்ந்த 37 வயதான நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தங்காலையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு..
படிக்க 0 நிமிடங்கள்