வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன..

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன..

🕔13:29, 30.ஜூன் 2022

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் 10ம் திகதி வரை கொன்சியூலர் பிரிவின் பொதுமக்கள் சேவைகள் மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே பொதுமக்களுக்கான சேவைகள் இடம்பெறுமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளிலுள்ள கொன்சியூலர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் சேவை

Read Full Article
ஜப்பானில் 150 வருடங்களின் பின்னர் அதிக வெப்பநிலை பதிவு

ஜப்பானில் 150 வருடங்களின் பின்னர் அதிக வெப்பநிலை பதிவு

🕔13:27, 30.ஜூன் 2022

ஜப்பானில் 150 வருடங்களின் பின்னர் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1875ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பானின் வெப்பநிலை 35 பாகை செல்சியஸை தாண்டியுள்ளது. இசேசாகி நகரின் வெப்பநிலை 40 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரித்துள்ளதால் குளிரூட்டி போன்ற மின்சார உபகரணங்களின் பாவனையும் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதில் தடைகள் காணப்படுவதாக ஜப்பான் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
அடுத்த மாதம் பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் நாட்டுக்கு வருகை..

அடுத்த மாதம் பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் நாட்டுக்கு வருகை..

🕔13:03, 30.ஜூன் 2022

38 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை எடுத்துவரும் கப்பல் அடுத்த மாதம் இலங்கையை வந்தடையவுள்ளது. எதிர்வரும் 11ம் திகதிக்கும் 15ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கப்பல் நாட்டை வந்தடையும். 30 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் பெற்றோலை எடுத்துவரும் கப்பல் ஜுலை மாதம் 22ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.

Read Full Article
அமைச்சர் கஞ்சன கட்டார் இராச்சியத்தின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருடன் சந்திப்பு

அமைச்சர் கஞ்சன கட்டார் இராச்சியத்தின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருடன் சந்திப்பு

🕔13:03, 30.ஜூன் 2022

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டார் இராச்சியத்தின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஷெய்க் மொஹமட்டை நேற்று சந்தித்துள்ளார். இலங்கைக்கு எரிபொருள் இறக்கமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Read Full Article
அடுத்த மாதம் முதல் தேவையான அளவு எரிவாயு இலங்கைக்கு..

அடுத்த மாதம் முதல் தேவையான அளவு எரிவாயு இலங்கைக்கு..

🕔13:03, 30.ஜூன் 2022

அடுத்த மாதம் தேவையான அளவு எரிவாயு இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. 6, 10, 15, 22 மற்றும் 24ம் திகதிகளில் மூவாயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயுவை எடுத்துவரும் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. எதிர்வரும் 6ம் திகதிக்கு பின்னர் நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுமென லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Read Full Article
மீன் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம்

மீன் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம்

🕔12:48, 30.ஜூன் 2022

மீன் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் பண்வில மடுகெலே பகுதியில் பதிவாகியுள்ளது. வீட்டின் முன்பகுதியில் மீன்களை வளர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் இரண்டரை அடி ஆழமான தண்ணீர் தொட்டியில் விழுந்தே குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன்பாக குழந்தை தனியாக விளையாடிக்கொண்டிருந்தபோது மீன்தொட்டிக்குள் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article
புதிய வகை கொவிட் வைரஸ் திரிபு 110 நாடுகளில் பரவல்..

புதிய வகை கொவிட் வைரஸ் திரிபு 110 நாடுகளில் பரவல்..

🕔12:47, 30.ஜூன் 2022

திய வகை கொவிட் வைரஸ் திரிபு 110 நாடுகளில் பரவியுள்ளது. BA – 4 BA – 5 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ் திரிபு தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட கொவிட் வைரஸ் திரிபுகளை விட புதிய வகை திரிபுகள் வீரியம் மிக்கவையென உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவை வேகமாக பரவும் தன்மை

Read Full Article
IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகம்..

IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகம்..

🕔12:44, 30.ஜூன் 2022

எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சகல பவுசர்களையும் பணிக்கு சமூகமளிக்குமாறு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்தல் விடுத்துள்ளது. இன்றைய தினம் ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளே விநியோகிக்கப்படுமென ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Read Full Article
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா – இலங்கைக்கான சீன தூதுவர் சந்திப்பு

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா – இலங்கைக்கான சீன தூதுவர் சந்திப்பு

🕔12:29, 30.ஜூன் 2022

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா, இலங்கைக்கான சீன தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சீன முதலீட்டு திட்டங்களை மேம்படுத்துதல், பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துதல் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை, சீன உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா நீண்டகாலமாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடாக காணப்படுகிறது.

Read Full Article
தலீபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை கடத்துவதாக தகவல்..

தலீபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை கடத்துவதாக தகவல்..

🕔12:26, 30.ஜூன் 2022

தலீபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை கடத்துவதாக தெரியவந்துள்ளது. காய்கறிகளை ஏற்றிச்செல்லும் லொறிகள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் வெளிப்படையாகவே துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தலீபான்களால் கடத்தப்படும் ஆயுதங்களே இவ்வாறு விற்பனை செய்யப்படுகின்றன. இதேவேளை ஆப்கானிஸ்தானின் தெற்கு கந்தஹார் மாகாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை ஆப்கானிஸ்தான்

Read Full Article