நிலையான தீர்வு எட்டப்படும் வரை உலக வங்கி இலங்கைக்கு வழங்கம் குறுங்கால நிதி உதவிகளை பாராட்டுவதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சில மாதங்களில் உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் வியோ கண்டாவை சந்தித்த போதே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், ஏனைய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடைகளை வழங்கும் நாடுகளிலிருந்து நீணடகால உதவிகள் கிடைக்கப்பெறும் வரை உலக வங்கியின் ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்தார். அத்துடன் நிலையான தீர்வு கிடைக்கப்பெறும் வரை உலக வங்கியின் ஒத்துழைப்புக்கள் பாராட்டத்தக்கவையெனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை தற்போதைய கடினமான நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்கென நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கவுள்ளதாக உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் தெரிவித்துள்ளார்.