fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பரீட்சை அனுமதி அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல்..

ITN News Editor
By ITN News Editor மே 13, 2022 12:50

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. அனுமதி அட்டைகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ண தெரிவித்தார். கடந்த சில நாட்களாக இடம்பெற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக பரீட்சை அனுமதி அட்டைகளை விநியோகிக்கும் பணிகளுக்கு தாமதம் ஏற்பட்டது. எனினும் இன்று முதல் அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் விநியோக பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ண தெரிவித்தார். இதேவேளை சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 13, 2022 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க