கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்காகவும், வரிக்கொள்கைகளை மறுசீரமைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடைநிறுத்தப்படாது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். கலகெதர, தெமோதர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடி நாட்டில் காணப்பட்ட போதும், கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லல் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல் நடவடிக்கைகள், சுயதொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் என்பவற்றை முன்னெடுத்து செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். அரச வருமானத்தை அதிகரித்து அவற்றின் பிரதிபலன்களை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் வரி மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் : அமைச்சர் தினேஷ் குணவர்த்தன
படிக்க 1 நிமிடங்கள்