எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். கடந்த சில வாரங்களாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர். நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருந்தன.
இதேவேளை எரிவாயுவுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 600 மெற்றிக் தொன் எரிவாயுவை எடுத்து வந்த கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது. எரிவாயு முத்துராஜவெல முனையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், சிலிண்டர்களில் அடைக்கப்படும். அவை இன்றையதினம் சந்தைக்கு விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.