பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் வழக்கு விசாரணை இன்று..
Related Articles
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் வழக்கு விசாரணை இன்று இடம் பெறவுள்ளது. இதேவேளை இந்தியாவில் முதல் தடவையாக எக்ஸ் ஈ என்ற புதிய கொரோனா திரிபு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இரத்து செய்த மற்றும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்தல் என்பன தொடர்பில் தீர்மானத்தை அறிவிக்கும் வழக்கு விசாரணை இன்று பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் எந்தவொரு தடைகள் வந்த போதிலும் வழக்கின் தீர்ப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுமென பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரதமர் இம்ரான்கான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனையடுத்து அந்நாட்டு எதிர்கட்சியினால் அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணை வெளிநாட்டு சூழ்ச்சிகளின் ஒரு பங்கு எனவும் இது அரசியல் அமைப்பிற்கு முரணானதெனவும் தெரிவித்து பிரதி சபாநாயகர் குறித்த பிரேரணையை இரத்து செய்தார். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம் கொடுப்பதை விடவும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கை நாட்டின் அரசியல் யாப்பை மீறும் செயல் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.