அம்பறை மாவட்டத்தில் இம்முறை மஞ்சள் விளைச்சல் வெற்றியடைந்துள்ளது. மஞ்சள் கொள்வனவு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
நாமல் ஓய பிரதேசத்தில் மஞ்சள் விளைச்சலை கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை 200 மெட்ரிக் தொன் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஒரு விவசாயிடமிருந்து 500 கிலோ கிராம் மஞ்சள் கொள்வனவாகுவதுடன் ஒரு கிலோவுக்கென 165 ரூபா தொகை வழங்கப்படுகின்றது. கடந்த வருடம் மஞ்சள் இறக்குமதி மூலம் 1300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனினும் இம்முறை இலங்கை மஞ்சள் விளைச்சலில் தன்னிறைவடைந்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.