தற்போதைய எரிபொருள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு வழங்கப்படா விட்டால் அடுத்த வாரம் சகல பஸ்களும் சேவையிலிருந்து விலகுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இந்தவாரம் எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படா விட்டால், நாம் கட்டாயமாக அடுத்த வாரம் இலங்கை முழுவதும் பஸ் போக்குவரத்திலிருந்து விலகிக் கொள்வோம். ஏனைய பஸ் சங்கங்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளோம். எமக்கு இரு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று இந்த வாரத்திற்குள் எரிபொருள் பிரச்சினையை தீர்க்க வேண்டும். 2 வது பிரச்சினை மார்ச் 31 ஆம் திகதிக்கமுன்னர் லீசிங் செலுத்த வேண்டிய கதையொன்றும் உள்ளது. இந்த இரு பிரச்சினைகளையும் தீர்க்காவிட்டால் இந்த இரு விடயங்களையும் அடிப்படையாக வைத்து அடுத்த வாரம் நாம் பஸ் போக்குவரத்திலிருந்து விலகிக் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.