போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 6 பெண் சந்தேகநபர்கள் கைது..
Related Articles
போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 6 பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 14, மோதரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து 188 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளை பெண் சந்தேகநபர்கள் முன்னெடுத்து சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொடை, வெல்லம்பிட்டிய, மோதரை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.