கெரவலப்பிட்டியவுக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் லசந்த எரிவாயு பிரச்சினையை தீர்ப்பது குறித்து விளக்கம்..
Related Articles
அடுத்து வரும் இரு வாரங்களில் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவிக்கின்றார். கெரவலப்பி;ட்டிய எரிவாயு தொகுதிக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்கஅ மைச்சர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை 3700 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த எரிவாயுக்காக கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கெரவலப்பிட்டிய முனையத்திற்காக எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ கம்பனி தெரிவிக்கின்றது. நாளை மறுதினம் 3500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்றும் சனிக்கிழமை 3500 மெட்ரிக் தொன் அடங்கிய மற்றுமொரு கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக குறித்த கம்பனி தெரிவிக்கின்றது. இவற்றிற்கு தேவையான கொடுப்பனவை செலுத்துவதற்குரிய வெளிநாட்டு நாணயக்கையிருப்பு காணப்படுவதாகவும் லிட்ரோ கம்பனி தெரிவிக்கின்றது.