எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் விநியோக நடவடிக்கைகளுக்கு இராணுவ கண்காணிப்பு..
Related Articles
நாடு பூராகவும் உள்ள சிபேட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் விநியோக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இராணுவத்தை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் முறுகல் நிலையை கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வாறு இராணுவ வீரர்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று அண்மையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மேலும் 20 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று அடுத்து வரும் ஓரிரு நாட்களுக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.