மிகை வரி சட்ட மூலம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதென உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அது தொடர்பான தீர்மானம் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவினால் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. மிகை வரி சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமெனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் வாத பிரதிவாதங்கள் இடடம்பெற்றன. இந்தியா இக்கட்டாண சூழ்நிலையில் வேறு நாடுகளை விட இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்றைய தினம் முதல் எதிர்வரும் 25ம் திகதி வரை ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளன. இன்றைய தினம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகள் தொடர்பான திருத்தச்சட்டமூலத்தின் 2ம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. நாளைய தினம் காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் கீழான ஒரு சில சரத்துக்கள் தொடர்பான விவாததமும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.